ஜனவரி முதல் விரைவு ரயில் தொடர்பு (இஆர்எல்) பயணக் கட்டணம் உயர்வதை அடுத்து மீட்டரில் ஓடும் டெக்சிகளே கோலாலும்பூரிலிருந்து கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்குச் சென்றுவர பலரும் விரும்பிப் பயன்படுத்தும் வாகனங்களாக விளங்கும்.
குழுவாக பயணம் செய்வோர் டெக்சி கட்டணங்கள் கட்டுப்படியாக இருப்பதைக் காண்பார்கள் என சியாரிகாட் பிக் புளு பிரிமியம் டெக்சி ஆலோசகர் ஷம்சுபாரின் கூறினார்.
“நான்கு பேர் சேர்ந்து ஒரு நீலநிற டெக்சிக்கு சராசரி கட்டணமாக ரிம130 தான் கொடுப்பார்கள். சிகப்பு நிற டெக்சி என்றால் ஒரு-வழிப் பயணத்துக்கு ரிம60. அதே வேளை இஆர்எல்லுக்கு ரிம220.
“டெக்சி ஓட்டுநர்கள் பல தடவை சென்று வந்தால் வருமானம் கூடும்”, என்றாரவர்.
ELR கட்டணத்தைக் கட்டுப்படுத்த ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை? மக்களின் நலனில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என்பதைத்தான் இந்த கட்டண உயர்வு காட்டுகிறது.
ஆகா! டெக்சிகளுக்கு நல்ல காலம்! இனி நமது டெக்சி ஓட்டுனர்கள் தமிழ்ப் பத்திரிகைகள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்!