விசாரணை பற்றி வெளியில் தெரிவித்த பிஏசி உறுப்பினர்களுக்குக் கண்டனம்

liangபொதுக் கணக்குக்குழு(பிஏசி)  உறுப்பினர்  ஒருவர்,  நேற்றைய  விசாரணை  பற்றி  ஊடகங்களிடம்  விவரித்த  சக  பிஏசி  உறுப்பினர்களைக்  கடிந்து  கொண்டார்.  நேற்று  பிஏசி 1எம்டிபி  தலைவர் அருள்  கந்தா கந்தசாமியை  விசாரணை  செய்தது.

ஊடகங்களிடம்  பேசிய  அவ்விருவரும்  பிஏசி  விசாரணை  பற்றி  பிஏசி  தலைவர்  மட்டுமே  அறிக்கை விடுக்க  முடியும்  என்ற நியதியைப்  புறக்கணித்து  விட்டனர்  என  கெராகான்  எம்பி  லியாங்  டெக்  மெங்  சாடினார்.

“என்ன  காரணமோ  தெரியவில்லை  என்  பிஏசி  சகாக்கள்  இருவர்  நேற்றைய  பிஏசி  விசாரணைக்குப்  பின்னர்  தவறான  தகவல்களைத்  தெரிவித்ததுடன்  பிஏசி  விசாரணை  பற்றி  மக்களிடம்  தப்பெண்ணத்தை  உண்டாக்கும்  நோக்கத்துடனும்  பேசியிருக்கிறார்கள்”, என்றாரவர்.

அவ்விருவரும்  பிஏசி  விசாரணையில்  உண்மையைக்  கண்டுபிடிப்பதைவிட  அதை அரசியலாக்குவதிலேயே  குறியாக  இருக்கிறார்கள்  என  அந்த  சிம்பாங்  ரெங்காம்  எம்பி  கூறினார்.

லியாங்  பெயர்களைக்  கூறவில்லை  ஆனால்,  பிகேஆர்  எம்பி  வில்லியம்  லியோங்  பற்றியும்  டிஏபி  எம்பி  டோனி  புவா  பற்றியும்தான்  அவர்  குறிப்பிடுகிறார்  என்பது  வெள்ளிடைமலை.

அவ்விருவரும்தான்  நேற்று  விசாரனைக்குப்  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசினர்.