முஸ்லிம் கல்வியாளரான காசிம் அஹ்மாட் ஃபாட்வாவுக்குக் கட்டுப்படாமல் இஸ்லாத்தை இழிவு செய்தார் எனக் கூட்டரசு பிரதேச இஸ்லாமியத் துறை தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருக்குச் சாதகமாக தீர்ப்பளித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழு, கடந்த ஆண்டு மார்ச் 26-இல் அந்த 82-வயது கல்வியாளர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமான செயல் என்று கூறியது.
நீதிபதிகளின் ஒருமித்த தீர்ப்பை நீதிபதி வெர்னோன் ஒங் வாசித்தார். காசிமைக் கைது செய்யும் வாரண்டில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததாகவும் அதனால் அது செல்லாது என்றும் அவர் கூறினார்.
காசிமுக்கு ரிம20,000 செலவுத்தொகை கொடுக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.