நேற்று பிற்பகல் கோத்தா ராயா விற்பனை வளாகத்தில் நிகழ்ந்த அடிதடிச் சண்டை தொடர்பில் 38-வயது ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
“அவர் அந்த விற்பனை வளாகத்தில் வாகன நிறுத்தமிடப் பணியாளராக வேலை செய்கிறார்”, என டாங் வாங்கி மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சுப்பிரெண்டெண்ட் ஹபிபி மஜிஞ்சி தெரிவித்ததாக த ஸ்டார் ஆன்லைன் கூறிற்று.
கைபேசி கடை ஒன்றின் பணியாளர்களைத் தாக்கிய ஒரு கும்பலில் அவரும் ஒருவர் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் அவரைத் தடுத்து வைத்துள்ளனர்.
அவர்தான் அங்குள்ள கடைக்காரரால் ஏமாற்றப்பட்டதாக சொல்லப்படுகின்றவரா என்பதையும் போலீஸ் விசாரணை செய்து வருகிறது.
நேற்று, அங்குள்ள கைபேசி விற்பனை செய்யும் ஒரு கடையில் வாடிக்கையாளர் ஒருவர் ஏமாற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது. அதைக் கேட்பதற்கு சுமார் 20பேர் அக்கடையை முற்றுகையிட அது அடிதடியில் முடிந்திருக்கிறது
முதலில் சீன விற்பனையாளர் வாடிக்கையாளரிடம் பண்பாக பேச வேண்டியது மிக அவசியம்.பெரும்பாலான சீன விற்பனையாளர்கள் திமிராக பேசுவது கவனிக்கப்பட வேண்டும்.பல இடங்களில் நேரில் பார்த்துள்ளேன்.அவர்களுக்குதான் எல்லாம் தெரியும் என்ற திமிர் அதிகம் உள்ளது. கண்ணியமற்ற தரைகுரைவான பேச்சு அவர்களிடத்தில் உள்ள மாற்றவேண்டிய குறைகள்.
இத்தகைய நிகழ்வுகள் நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்குகிறது .
பல நேரங்களில் அடி உதவுவதைப்போல், அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள். இந்த மாதிரி திமிர் பிடித்தவர்களை சும்மா விடவே கூடாது. இனிமேல் அந்த கடைக்காரன் யாரையும் ஏமாற்றவே மாட்டான். ஒவ்வொரு முறையும் யாரையும் ஏமாற்ற நினைக்கும் போது அந்த அடி அவன் நினைவுக்கு வரும். சட்டம் அதன் கடமையை செய்யட்டும், அது விசாரணை எல்லாம் முடிந்து நீதிமன்றத்துக்கு வந்து வழக்காடி தீர்ப்பு வருவதற்கே பத்தாண்டுகளாவது ஆகிவிடும். துணிந்த்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தையே!
நிறைய சீன விற்பனையாளர்கள் வாடிகயாலர்களிடம் தரக்குறைவாகவும் ,பண்புடன் பேசவும் [kurang ajar ] தவறிவிடுகிறார்கள் அவர்களுக்கு தான் எல்லாமே தெரியும் என்று திமிர் பேச்சி .
அங்கே வியாபாரத்தைக் கெடுக்க இப்படி ஒரு கும்பல் அடாவடித்தனம் பண்ணுவதை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. நாளை இண்டிய முஸ்லிம் அன்பர்களின் உணவகத்திற்கு எதிராக இப்படி ஒரு கும்பல் வேண்டுமென்றே அடாவடித்தனம் பண்ணினால் என்னவாகும்? இதே நிலை இண்டியன்களுக்கும் எற்பட்டால் என்னவாகும்?
அங்கு வேறு வியாபாரம் செய்கின்ற சீனர்களே நடந்த சம்பவத்திற்கு அதரவாகத்தான் இருக்கிறார்கள், கைதொலைபேசி விற்க்கும் சீனர்கள் யாரையும் மதிப்பதில்லை, ஒரிஜினல் என்று கூரி போலியான கைதொலைபேசிகளை விற்பது இன்னும் பலமாதிரியான தவறான வியாபார யுத்திகளை கையாள்வது வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது, இன்னும் பல பிரச்சனைகளை உண்டுபன்னுவார்கலாம் கைபேசி விற்பனை செய்யும் சீனர்கள்.
அலி தின்சு என்பவரை 2 நாள் காவலில்,ஒரு பெண் சொல்லுகிறார் பூமிக்கல் திருட செய்வார்கள்,அவர்களுக்கு வருமானம் யீட்ட முடியாதுபோனால் யென்று,அதுவும் முகனூலில் வெளிபடையாக,
வெறுமனே சுற்றி திரிவது யாரோ ஒருவர் பாடுபட்டு சேகரித்ததை வலுகட்டாயமாக அபகரிப்பர் அதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கும் இது எல்லா நாட்டிலும் நடப்பதே,
வாழ்க நாராயண நாமம்.