ஃபாட்வே அறிவிக்கப்பட்டிருந்தாலும் சுகாதார அமைச்சு ‘வேப்பு’க்குத் தடை விதிக்காது

vapingதேசிய  ஃபாட்வா மன்றம்  மின் சிகரெட்டுகளைத்  தடுக்கப்பட்ட  பொருள்களாக  அறிவித்திருந்தாலும்  சுகாதார  அமைச்சு  வேப்புக்குத்  தடை  விதிக்கவில்லை  எனச்  சுகாதார  துணை  அமைச்சர்  ஹில்மி  யாஹ்யா இன்று  கூறினார்.

இப்போதைக்கு  அதற்குத்  தடை  இல்லை  என்றாரவர்.

“நாங்கள்  அதைத்  தடை  செய்யவில்லை. தடை  செய்தல்மீது அமைச்சரவை  என்ன முடிவு  செய்கிறதோ அதையே  பின்பற்றுவோம். இப்போதைக்கு  ‘வேப்’ பயனீட்டைக் கடுப்படுத்தி  வருவோம்”, என  நாடாளுமன்றத்தில்  செய்தியாளர்களிடம்  ஹில்மி  கூறினார்.

“புகைபிடிக்கக் கூடாத  பகுதிகளில் மட்டும்  புகைத்தலையும்  வேப் பயன்படுத்தப்படுவதையும்  தடுப்போம்”, என்றாரவர்.

ஆனால், வெப்  மீதான சிறப்புக்  குழு ஒரு  முடிவெடுத்ததும்  அந்த  முடிவை  அமைச்சு  அப்படியே  பின்பற்றும்.