பாதுகாப்புப் பகுதி என்று பிரகடனப்படுத்தும் தகுதி பேரரசருக்கு மட்டுமே உண்டு

agongஒரு  பாதுகாப்புப்  பகுதியைப்  பிரகடனப்படுத்த  மிகவும்  தகுதியுடையவர்  மாட்சிமை  தங்கிய  மாமன்னர்  மட்டுமே  என்கிறார் சாபாவைச்  சேர்ந்த பிஎன்  செனட்டர்  ஒருவர்.

எனவே, தேசிய  பாதுகாப்பு  மன்ற(என்எஸ்சி)  சட்டவரைவின்கீழ்  பிரதமருக்கு  அந்த  அதிகாரம்  வழங்கப்பட்டிருப்பதை  மாற்றிப்  பேரரசருக்கு வழங்கப்பட  வேண்டும்  என உப்கோ  செனட்டர்  லுக்காஸ் உம்புல்  கூறினார்.

என்எஸ்சி  சட்டவரைவு  பிரிவு  18,  எந்தவொரு  இடத்தையும்  கூடினபட்சம்  ஆறு  மாதங்களுக்குப் பாதுகாப்புப்  பகுதியாக    அறிவிக்கும்  அதிகாரத்தை பிரதமருக்கு  வழங்குவதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

“இப்படிப்பட்ட  விரிவான  அதிகாரம்  அரசியலுக்கு  அப்பாற்பட்ட  ஒருவருக்குத்தான்  வழங்கப்பட  வேண்டும். மாட்சிமை  தங்கிய  பேரரசரைத்தான்  குறிப்பிடுகிறேன்”. டேவான்  நெகாராவில்  என்எஸ்சி  சட்டவரைவுமீதான  விவாதத்தில்  லுக்காஸ்  கலந்துகொண்டு  பேசினார்.