ரிம2.6 பில்லியன் சுவரொட்டிகள் தொடர்பில் டிஏபி கட்சிக்காரர் போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்

posterடிஏபி  கட்சிக்காரர்  ஒருவரின் காரில் ‘Mana RM2.6 billion?'(ரிம2.6 பில்லியன் எங்கே?) என்று  வினவும்  ஒரு கட்டு  சுவரொட்டிகள்  இருந்ததால்  அவர்  இப்போது  போலீஸ்  நிலையம்  சென்றிருக்கிறார்.

பகாங்கிலிருந்து  கோலாலும்பூர்  சென்று  கொண்டிருந்த  டிஏபி  உறுப்பினர்  லவ்  யோங் ஷாவ்,  செராஸ்,  தாமான்  மிடாவில்  ரோந்து  பணியில்  ஈடுபட்டிருந்த  இரண்டு  போலீஸ்காரர்களால்  நிறுத்தப்பட்டார்.  காரில் சுவரொட்டி  கட்டைக்  கண்டு  அது  பற்றி  விசாரித்திருக்கிறார்கள்.

இவரும்  விவரித்தார். டிஏபி  உதவித்  தலைவர்  தெரேசா  கொக்கும்  கைபேசிவழி  போலீசாருடன்  பேசினார். போலீசார் அவரை  தங்களுடன்  செராஸ்  போலீஸ்  தலைமையகத்துக்கு  வருமாறு  கூறி  விட்டனர்.

“அவரைக்  கைது  செய்யவில்லை. போலீஸ்  தடுத்து  நிறுத்தியது  பற்றி  ஒரு  புகாரைப்  பதிவு  செய்யத்தான் அழைத்துச்  சென்றார்கள்  என  லவ்-இன்  நண்பர்  ‘பில்லி’ என்பார்  தெரிவித்தார்.

போலீசார்  லவ்-இடம்  சிறுநீர் பரிசோதனை  செய்ய  வேண்டும்  என்றும்  கூறினார்களாம்.

போலீசார்  முதலில்  சுவரொட்டிகளை  வீசி  எறிந்துவிட்டு  போலீஸ்  நிலையத்துக்கு  வந்தால் லவ்-வை விட்டு  விடுவதாக  சொல்லி  இருக்கிறார்கள். பிறகு  முடிவை  மாற்றிக்  கொண்டு  சுவரொட்டிகளுடன்  போலீஸ்  நிலையத்துக்கு  வருமாறு  கூறியுள்ளனர்.

“இப்படியும்  அப்படியும்  மாற்றி  மாற்றிப்  பேசி  இருக்கிறார்கள்”, என  பில்லி  கூறினார்.