பிடிபிடிஎன் பிடித்தம் செய்வதற்குக் கொடுத்த அங்கீகாரத்தை கியூபெக்ஸ் மீட்டுக் கொள்ளக் கூடும்

cuepacsதேசிய   உயர்க்கல்விக்  கடன்  நிதி(பிடிபிடிஎன்)  அரசாங்கப்  பணியாளர்களின்  சம்பளத்தில்  கூடின பட்சம்  பிடித்தம்  செய்யும்  நடவடிக்கையைத்  தொடருமானால்  சம்பள  வெட்டுக்குக்  கொடுத்த  ஒப்புதலை அரசாங்க  ஊழியர்  சங்கங்களின்  கூட்டமைப்பு  மீட்டுக்  கொள்ளக்கூடும்.

பிடிபிடிஎன்  கடன்களுக்காக  அரசாங்கப்  பணியாளர்களின்  சம்பளத்தில்  உயர்ந்த  பட்சம்  பிடித்தம்  செய்யப்படுவதால்  அவர்களுக்கு  மிகுந்த  நிதிச் சுமை  ஏற்படுகிறது என கியூபெக்ஸ்  தலைவர்  ஆஸே  மூடா  கூறினார்.

“சில  அரசாங்க  ஊழியர்களின்  சம்பளத்தில்  ரிம19 தான்  மீதியுள்ளது. அவர்கள் சாப்பாட்டுக்கு என்ன  செய்வார்கள்?

“பிடிபிடிஎன் கடன்களுக்காக  சம்பளத்தில்  பிடித்தம்  செய்துகொள்ள  அனுமதிக்கும்  முடிவை  கியூபெக்ஸ்  மீட்டுக்கொள்ளவும்  தயங்காது  என்பதை  நினைவூட்ட  விரும்புகிறேன்”, என கியூபெக்ஸ்  2015  கூட்டத்துக்குப்  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசியபோது  ஆஸே கூறினார்.