‘புத்ரா ஜெயா மக்கள் உரிமைகளைக் காக்கத் தவறிவிட்டது’

suarமலேசிய  அரசாங்கம்  மலேசியர்களின்  உரிமைகளைப்  பாதுகாப்பதாக  எடுத்துக்கொண்ட  உறுதிமொழியைக்  காக்கத்  தவறிவிட்டது.  நேற்றிரவு  தேசிய  பாதுகாப்பு மன்ற( என்எஸ்சி) சட்டவரைவு  மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை  அடுத்து  மனித  உரிமை  என்ஜிஓ  சுவாராம்  இவ்வாறு தெரிவித்துள்ளது.

“மலேசிய  மக்களின்  பிரதிநிதிகளான  அவர்கள்  மலேசியர்களின்  உரிமைகளைப்   பாதுகாக்கத்  தவறி, அந்த  உரிமைகளை  அழிப்பதில்  விருப்பதுடன்  ஈடுபட்டது  எடுத்துக்கொண்ட  உறுதிமொழியைப்  புறக்கணித்து  விட்டார்கள்  என்பதைக்  காண்பிக்கிறது”, என  சுவாராம்  நிர்வாக  இயக்குனர்  சிவன்  துரைசாமி  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

என்எஸ்சி  சட்டவரைவு,  கூட்டரசு  அரசமைப்பும் அனைத்துலக  மனித  உரிமை  பிரகடனமும்  மலேசியர்களுக்கு  வழங்கும்  உரிமைகளையும்  சுதந்திரத்தையும்  செல்லாதவையாக  ஆக்கி விடும்  என்றாரவர்.

எனவே, என்எஸ்சி  சட்டவரைவு  ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதை  சுவாராம்  கண்டிக்கிறது.