இயல்பான வாக்காளர் பதிவுமுறையை அமல்படுத்துவது கடினம், ஏனென்றால் அது மலேசிய தேர்தல் முறையில் பெருந் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் கூறினார்.
அரசமைப்பு பிரிவு 119, குடிமக்களுக்கு ஒரு விருப்புரிமை அளிக்கிறது என்றாரவர். அவர்கள் விரும்பினால் வாக்காளராகலாம், வேண்டாம் என்றால் பதிவு செய்துகொள்ளாமல் இருக்கலாம்.
இயல்பாக வாக்காளராகும் முறைக்கு மாற வேண்டுமானால் அரசமைப்பின் 119வது பிரிவையும் அது தொடர்பான விதிமுறைகளையும் திருத்த வேண்டும்.
“திருத்தம் செய்வதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் என்பதையும் கவனிக்க வேண்டும். எல்லாக் கட்சிகளும் ஒப்புக்கொண்டால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.
“மேலும், அம்முறை அமல்படுத்தப்பட்டால் வாக்காளர் பட்டியலிலும் பெருந் தாக்கத்தை ஏற்படுத்தும்”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
இயல்பான வாக்காளர் பதிவுமுறை அமலுக்கு வந்தால் அடையாள அட்டையில் தங்களின் முகவரியை இற்றைப்படுத்திக் கொள்ளாமல் வேறு இடங்களுக்கு மாறிச் சென்றவர்கள் பிரச்னையை எதிர்நோக்குவார்கள்.
அடையாள அட்டையில் உள்ள முகவரியை வைத்துத்தான் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது என்றவர் சொன்னார்.
2008ல் இப்பதவிக்கு வந்து என்ன புதுத் திருத்தங்களை கொண்டு வந்தீர்???2010ல் நாடாளுமன்ற தேர்வுக்குழுவும் அரசாங்க சார்பற்ற ஒரு இயக்கமும் செய்த இந்த இயல்பாக வாக்காளர் பதிவு செய்யும் முறையை இவ்வளவு நாட்கள் தூங்க விட்டுவிட்டு இப்போது அது முடியாது இது முடியாது என்றால், நீ இப்பதவிக்கே தகுதியற்றவன் என்பதை நிரூபித்துள்ளாய்!!! ஆளும் அரசின் சூழ்ச்சிக்கு நீரும் தலையாட்டி பொம்மையே!!!!
இதைதான் சாத்தானின் வேதம் என்பார்கள் !