பெர்காசா, ஓராண்டுக்கு முந்திய தேவாலய-எரிப்பு புகாரை மறுபடியும் பதிவு செய்தது

perkasa2014  டிசம்பரில்,  ஜாலான்  ராஜா  லவுட்  தேவாலயத்துக்கு  தீ வைக்கப்பட்டதாக  சமூக  வலைத்தளங்களில்  பரப்பப்பட்ட  வதந்தி பற்றிச்  சரியாக  ஒராண்டுக்கு  முன்னர்   புகார்  செய்தும்,  இதுவரை  யாரும்  கைது  செய்யப்படாததாலும்  போலீஸ்  அதன்மீது  நடவடிக்கை  எடுக்காமலும்  இருப்பதைக்  கண்டு குழப்பமடைந்துள்ள  மலாய்க்காரர்  உரிமைக்காக  போராடும்  என்ஜிஓ-வான  பெர்காசா  அதே  புகாரை இன்று  மீண்டும்  செய்யும்.

“வினோதமாக  இருக்கிறது, பிரதமரை  யாராவது   பழித்துரைத்தால் கைது  செய்யப்படுகிறார்கள், இஸ்லாத்தை  இழிவு செய்கிறார்கள்.  யாரும் கைது  செய்யப்படுவதில்லை”, என  பெர்காசா  இளைஞர்  தலைவர்  இர்வான்  ஃபாமி  கூறினார்.

போலீசுக்கு  அழுத்தம்  கொடுக்கவே  மீண்டும்  புகார்  செய்யப்படுவதாக  அவர்  சொன்னார்.

தீய  நோக்கத்துடன்  அந்த  வதந்தியைச்  சமூக  வலைத்தளங்களில்  பரப்பியவர்மீது  நடவடிக்கை  எடுக்கப்பட  வேண்டும்  என்பதே  தங்கள்  விருப்பம்  என்றாரவர்.

கிறிஸ்மஸ்  நெருங்கும்போது  இந்த  விவகாரம்  வேண்டுமென்றே  கிளப்பி  விடப்படுகிறது  என்றும்  கிறிஸ்துவர்களையும்  முஸ்லிம்களையும்  ஆத்திரமூட்டுவதற்காகவே அவ்வாறு  செய்யப்படுகிறது என்றும்  எனவே  இதற்கொரு  முடிவு  கட்ட  வேண்டும்  என்றும்  அவர்  கேட்டுக்கொண்டார்.