விசா மோசடி: நான்கு தனியார் கல்விக் கழகங்களுக்கு எதிராக நடவடிக்கை

idrisஅன்னிய  மாணவர்களைச்  சேர்த்துக்கொள்ள  நான்கு  தனியார்  உயர்க் கல்விக் கழகங்களுக்கு  இடைக்காலத்துக்குத்  தடை  விதிக்கப்பட்டுள்ளதாக  உயர்க் கல்வி  அமைச்சர்  இட்ரிஸ்  ஜூசோ  இன்று  அறிவித்தார்.

வெளிநாட்டுத்  தொழிலாளர்கள்   மாணவர்  விசாக்களைப்  பயன்படுத்திக்கொண்டு  நாட்டுக்குள்  வந்து  விடுவது  கண்டு  பிடிக்கப்பட்டதை  அடுத்து  இந்நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. சில,  ‘விசா  கல்லூரிகள்’ என்றே  அழைக்கப்படுகின்றன.

நாட்டில்  உள்ள  எல்லா  தனியார்  பல்கலைக்கழகங்களையும்  கல்லூரிகளையும்  சோதனையிட்டுப்  பார்த்தப்பின்னர்  அவற்றில்  நான்குக்கு  மட்டும்  புதிதாக  வெளிநாட்டு  மாணவர்களைச்  சேர்ப்பதற்குத்  தடை விதிக்கப்பட்டிருப்பதாக  அமைச்சர்  தெரிவித்தார்.