பாஸ் உதவித் தலைவர்: அம்னோ இழைத்த பாவங்களை மன்னிக்க வேண்டியவர்கள் அவற்றால் பாதிக்கப்பட்டவர்களே தவிர தலைவர்கள் அல்ல

 

 அம்னோவுடன் ஒத்துழைக்கும் நடவடிக்கைகளை முடிக்கி விட்டிருக்கும் பாஸ் கட்சியின் தலைமைத்துவதற்கு அக்கட்சியின் உதவித் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

அவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த பாஸ் கட்சியின் உதவுத் தலைவர் இஸ்கந்தர் சாமாட், கடந்த காலத்தில் அம்னோ இழைத்துள்ள தவறுகளை யாராவது மன்னிக்க முடியுமா என்று கேட்கிறார்.

“அம்னோவின் தவறுகளை மன்னிக்க எடுக்கும் முடிவு ஒரு தலைவரைச் சார்ந்ததல்ல, மாறாக, அம்னோவின் அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் எடுக்க வேண்டியதாகும்”,. என்றாரவர்.

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கைதிகளை மேற்கோள் காட்டிய அவர், எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளித்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் அளிக்க மறுத்தது, எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவித்த கிராம மக்களுக்கு அவர்களின் சாலைகளை மேம்படுத்த, சாலை விளக்குகள் பொருத்த மறுத்தது போன்றவற்றை சுட்டிக் காட்டிய இஸ்கந்தர், இந்த மறுத்தல் பட்டியலுக்கு முடிவே இல்லை என்று மேலும் கூறினார்.

“நீங்கள் அம்னோவின் தவறுளை மன்னிப்பதற்கு முன்பு, முதலில் அவர்களை (பாதிக்கப்பட்டவர்களை) கேளுங்கள்”, என்று இஸ்கந்தர் வலியுறுத்தினார்.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அம்னோவுடன் ஒத்துழைப்பதில் ஆர்வம் கொண்டிருக்கலாம், ஆனால் பாஸ் உறுப்பினர்கள் அதில் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரியவில்லை.

கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் மற்றும் உதவித் தலைவர்கள் இட்ரீஸ் அஹமட் மற்றும் இஸ்கந்தர் ஆகியோர் அம்னோவுடன் ஒத்துழைக்க ஆர்வம் கொண்டிருக்கவில்லை.