கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை விபத்து, நால்வர் மரணம், 25 பேர் காயம்

 கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை 14 ஆவது மைல், ஜெலியில் இன்று முன்னேரத்தில் நடந்த ஒரு விரைவுப் பஸ் மற்றும் லோரி மோதலில் நால்வர் மரணமடைந்தனர், 25 பேர் காயமுற்றனர்.

பினாங்கு, பட்டர்வொர்த்திலிருந்து கோலதிரங்கானுவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அந்த விரைவு பஸ்சும் ஒரு கனரக லோரியும் காலை மணி 1.40 க்கு நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக ஜெலி தீயணைப்புப் படையின் உதவி அதிகாரி கூறினார்.

தகவல் கிடைத்தவுடன் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் காயமுற்றவர்களை மருத்துவமனையில் சேர்த்ததாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, திரங்கானு மந்திரி புசார் அஹமட் ரஸீப் அப்துல் ரஹ்மான் விபத்தில் மரணமுற்றவர்களின் குடுப்பத்தினர்களுக்கு அவரது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.