பாஸ் தலைவர் ஹாடிக்கு உத்துசானின் அரிய வரவேற்பு

 

 அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு திட்டம் ஒரு சூடான விவாதமாக இருந்து வரும் வேளையில், அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா பாஸ் தலைவர் பதுல் ஹாடி அவாங்கிற்கு நட்சத்திர வரவேற்பு நள்கியுள்ளது.

பாஸ் கட்சி தலைவர் ஹாடி அளித்துள்ள பாஸ்சின் கொள்கை விளக்க அறிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கி உத்துசான் அதனை ஒரு முழுப்பக்க அறிக்கையாக 12 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஓர் எதிர்க்கட்சியின் தலைவருக்கு உத்துசான் மலேசியா அம்மாதிரியான கௌரவத்தை அளித்ததில்லை. அதுவும் அம்னோவின் முதல் அரசியல் எதிரியான பாஸ்சுக்கு கொடுக்கப்பட்டதில்லை.

உத்துசான் வெளியிட்ட பாஸ் கட்சியின் தலைவர் ஹாடியின் அறிக்கையில், பிஎன் அரசுக்கு பாஸ் ஆலோசனை வழங்கும் பங்கை ஆற்ற முன்வந்திருப்பது அரசாங்கத்தில் பதவிகளைப் பெறுவதற்கல்ல, அரசாங்கத்தை காப்பாற்றும் இரட்சகராக இருப்பதற்கே என்று கூறப்பட்டுள்ளது.