இரமணன்: மஇகா தலைவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பேன்

 

 தம்மை கட்சியிலிருந்து சட்ட விரோதமாக நீக்கியதற்காக தாம் மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மஇகாவின் முன்னாள் தலைமைப் பொருளாளர் ஆர். இரமணன் கூறினார்.

மஇகா மத்திய செயற்குழு தம்மை கட்சியிலிருந்து நீக்கி விட்டதாக தெரிவிக்கும் கடிகதம் ஒன்றை தாம் இன்று பெற்றதாக இரமணன் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் கடிதத்தில் தெரிவிக்கப்படவில்லை என்று கூறிய இரமணன், மஇகா தலைவர் டாக்டர் சுப்ரமணியத்தின் மத்திய செயற்குழு கட்சி விதிகளின்படி முழுமையானதல்ல. ஆகவே, எவரையும் கட்சியிலிருந்து அகற்றுவதற்கான அதிகாரம் அதற்கு இல்லை என்று அவர் மேலும் கூறினார்.