வேப் தடையைச் சர்ச்சையாக்கும் ‘புத்திகெட்ட அரசியல்வாதிகள்’:ஜோகூர் சுல்தான் சாடல்

vapeban“புத்திகெட்ட அரசியல்வாதிகள்”  வேப்  விவகாரத்தை  அரசியலாக்கக்  கூடாது  என  ஜோகூர் ஆட்சியாளர்  சுல்தான்  இப்ராகிம்  இஸ்கண்டர்   கடிந்து கொண்டிருக்கிறார்.

வேப்புக்குத்  தடை  விதித்தால்  அடுத்த  தேர்தலில்  பிஎன்  வாக்குகளை  இழக்க  நேரும்  என்று  பூமிபுத்ரா  என்ஜிஓ-கள்  எச்சரித்திருப்பது  பற்றிக்  குறிப்பிட்டபோது சுல்தான்  இவ்வாறு  கூறினார்.

“மாநில  அளவிலும்  மத்தியிலும்  முடிவெடுக்க  முடியாமல்  இருக்கும்  அதிகாரிகளை  எண்ணி  எரிச்சலடைகிறேன்.

“அவர்கள்  முடிவுசெய்யாமல்  இழுத்துக் கொண்டிருந்தார்கள். அறிவுகெட்ட  அரசியல்வாதிகள்  சிலர்  வேப்புக்குத்  தடை  விதிக்கக்  கூடாது,  அதைச்  செய்தால்  ஒரு  மில்லியன்  வாக்குகளை  இழக்க  நேரும்,  பூமிபுத்ராக்களின்  நலன்கள்  பாதிக்கப்படும் என்று  கூறிக்  கொண்டிருக்கிறார்கள்.

“இது  முழுக்க  முழுக்க  ஒரு  சுகாதார  விவகாரம் ஆனால்,  அக்கறையற்ற  அரசியல்வாதிகள்  அரசியல்  பற்றியும்  இனத்தைப்  பற்றியும்  பேசிக்  கொண்டிருக்கிறார்கள். நம்ப முடியவில்லை”, என  சுல்தான்  த  ஸ்டாரிடம்  கூறினார்.