இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களுக்குத் தடைவிதித்த கைரிக்கு அஸ்ரி பாராட்டு

muftiகருத்துகளைத்  துணிச்சலாக  சொல்லும்   பெர்லிஸ்  முப்தி  அஸ்ரி  ஜைனுல்  அபிடின்  windsurfing  விளையாட்டில்  கலந்துகொள்ள  இஸ்ரேலிய விளையாட்டு  வீரர்கள்  இருவருக்கு  விசா  கொடுக்க  மறுத்த  இளைஞர், விளையாட்டுத் துறை  அமைச்சர்  கைரி  ஜமாலுடினைப்  பாராட்டினார்.

இன்று  லங்காவியில்  தொடங்கவுள்ள  ஒரு  போட்டியில்  நடப்பு  வெற்றியாளர்களான  அவ்விருவரும்  கலந்துகொள்ள  விருந்தனர். ஆனால், அவர்களுக்கு  விசா  வழங்க  அமைச்சர்  மறுத்தார். இஸ்ரேல்- பாலஸ்தீனியர்  சர்ச்சையைக்  கருத்தில்  கொண்டால்  கைரியின்  செயல்  நியாயமானதே  என்றாரவர்.

“விளையாட்டுகளை  மனிதாபிமானத்திலிருந்து  பிரித்துவிட  முடியாது.

“டிஏபி  விளையாட்டுகளில்  இஸ்ரேலுக்குள்ள  உரிமைகள்  பற்றிப்  பேசுகிறது.  ஆனால், பாலஸ்தீனியர்களின்  மனித  உரிமைகள்  பற்றி  அதிகம்  பேசுவதில்லை”, என  முப்தி  முகநூலில்  குறிப்பிட்டிருந்தார்.

நேற்று பேராக்  டிஏபி  பொருளாதார  மேம்பாட்டுப்  பிரிவுத்  தலைவர் சோங்  ஸெமின்  இஸ்ரேலிய windsurf  விளையாட்டு  வீரர்கள்  இயோவ்  ஒமர்,   நோய்  டிரிஹான்  ஆகியோருக்கு  விசா  கொடுக்க  மறுத்த  கைரியைக்  குறை  கூறியிருந்தார்.