கூரையின் சிலுவை போன்ற தோற்றத்தால் வந்தது பிரச்னை

cross hலங்காவில்  ஒரு  வீடமைப்புத்  திட்டத்தில்  புதிதாக  கட்டப்பட்ட  வீடுகளின்  கூரைகள்  வெள்ளைச்  சிலுவை  போன்ற  தோற்றத்தைக்  கொண்டிருப்பதால்  அதைப்  பற்றிப்  பேசுவதற்காக  லங்காவி  மாவட்ட  மன்றம்  வீடமைப்பாளரை  அழைத்துள்ளது.

அச்சந்திப்பு  நாளைக்  காலை   நடைபெறும்  என  கெடா  வீடமைப்புக்  குழுத்  தலைவர்  தாஜுல்  உருஸ்  மாட்  ஸைன்  கூறினார்.

சிலைவை  போன்று  காட்சி  அளிக்க  வேண்டும்   என்பதுதான்  அதன்  நோக்கமா  அல்லது  அது  ஒருவகை  வடிவமைப்பா  என்பதை  விளக்கிட அச்சந்திப்பு  வீடமைப்பாளருக்கு  வாய்ப்பாக  அமையும்  என்றாரவர்.

வீடுகளை  உடைக்க  வேண்டும்  என்று  உத்தரவிடப்பட்டிருப்பதாகக்  கூறப்படுவதை  அவர்  மறுத்தார்.

“அவை  சிலுவைகள்போல்  தெளிவாகக்  காட்சி  அளித்தால்  அவற்றின்மீது  சாயம்  பூசி  மாற்றி  அமைப்பது  நல்லது  என்பதே  வீடமைப்பாளருக்கு  நான்  கூறும்  ஆலோசனையாக  இருக்கும்”, என்று  தாஜூல்  கூறினார்.

வீடமைப்பாளரிடம்  பேசியதிலிருந்து  “அவற்றைச்  சிலுவைபோல்  அமைப்பது  அவரின்  நோக்கம்  அல்ல  என்றுதான் தோன்றுகிறது”  என்றாரவர்.