பாதுகாப்புக் காரணங்களால் பெர்லிஸ் குகை ரயில் சேவை நிறுத்தப்பட்டது

guaமூன்றாண்டுகள் நடத்தப்பட்டு  வந்த  பெர்லிஸ்  காக்கி புக்கிட்டில்  குவா கெலாம் 2( இருட் குகை2)-க்கான  ரயில்  சேவை  மக்களின்  பாதுகாப்பைக்  கருத்தில்கொண்டு  2013-இல்  நிறுத்தப்பட்டது.

இதனை இன்று தெரிவித்த  பெர்லிஸ்  சுற்றுலாக் குழுத்  தலைவர்   அப்துல்  ஜமில்   சாஆட், குகையின்  சுவர்களால்  ரயில்  வண்டி  அதிர்வுகளை  நீண்டநாள்  தாங்கிக்  கொள்ள  முடியாது  என்பது  தெரிய  வந்ததால்  அதை  நிறுத்த  முடிவெடுக்கப்பட்டதாகக்  கூறினார்.

குகைச்  சுவர்களைப்  பலப்படுத்த  மில்லியன்  கணக்கில்  செலவிட  வேண்டியிருக்கும். அதற்கு  மாநில  அரசிடம்  வசதி  இல்லை  என்றாரவர்.

“ரயில்  சேவை  குகைக்குச்  சுற்றுப்பயணிகளைக்  கவர்ந்திழுத்தது  உண்மைதான் ஆனாலும்  அதை  மீண்டும்  தொடக்குவதற்கு  மாநில  அரசு  எண்ணவில்லை. பாதுகாப்பு  அம்சமே  இதற்குக் காரணம்”, என்றார்.