சிலாங்கூர் அரசாங்கம் ஊராட்சி மன்றங்களில் அமானாவுக்கு இடமளிப்பது பற்றி இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஊராட்சி மன்றங்களில் இப்போதுள்ள கவுன்சிலர்களின் பதவிக் காலம் வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.
பாஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்டு மூன்று மாதங்களே ஆகும் அமானாவுக்கு மாநில அரசு ஊராட்சி மன்றங்களில் கவுன்சிலர் பதவி வழங்குமா என்று வினவியதற்கு சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இயான் யோங் ஹியான் இவ்வாறு கூறினார்.
சிலாங்கூர் ஊராட்சி மன்றங்களில் 288 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. அவற்றில் 120 இடங்களை பிகேஆர் வைத்துள்ளது. டிஏபிக்கு 98, பாஸுக்கு 70.
இப்பவே அமானா கட்சிக்கு தேவையான அறிமுகத்தையும் அவர்கள் அரசியல் ரீதியில் செயல்படுவதற்கு தேவையான இடத்தைக் கொடுத்தால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி இல்லாமலேயே இதர கட்சிகளுடன் கூட்டனி வைத்து சிலாங்கூரில் வெற்றி பெறலாம். அதை விடுத்து அஸ்மின் அந்த நிலா கட்சியை நம்பிக் கொண்டிருந்தால் சந்திர மண்டலத்திற்குப் போக முடியாது மாறாக ஆட்சியை கை விட்டுட்டு வீட்டிற்குப் போக வேண்டும்.
சீக்கிரமாக குடுத்து விடுங்கள் இல்லை என்றால் இன்னும் ஒரு புது கட்சி ஆரம்பித்து விடுவார்கள்