பிஎஸ்எம் மத்திய செயல்குழு உறுப்பினர் கைருல் நிஜாம் அப்ட் கனியை விசாரணைக்காகக் காவலில் வைக்க போலீசார் விடுத்த கோரிக்கையை மெஜிஸ்ட்ரேட் ஏற்கவில்லை.
வழகுரைஞர்களின் வாதங்களைச் செவிமடுத்த மெஜிஸ்ட்ரேட் விசாரணைக்காக அவரைத் தடுத்து வைக்க வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்ததாக பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் ஏ,சிவராஜன் தெரிவித்தார்.
“கைருல் நிஜாம் முகநூலில் பதிவிட்டதன் தொடர்பில்தான் விசாரிக்கப்படுகிறார்.. முகநூலை போலீசார் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்பதால் அவரைக் காவலில் வைக்க வேண்டியதில்லை என்றவர்கள் கூறினார்கள்”, என சிவராஜன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இப்போது கைருல் நிஜாமிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்கிறார்கள் என்றும் அது முடிந்ததும் அவர் விடுவிக்கப்படுவார் என்றும் அவர் சொன்னார்.
“ஆனால், அவர் மீண்டும் கைது செய்யப்படுவாரா என்பது தெரியவில்லை”, என்றாரவர்.
கைருல் நிஜாம், நேற்று தேச நிந்தனைச் சட்டத்தின்கீழும் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின்கீழும் கைது செய்யப்பட்டார்.
சக பிஎஸ்எம் சமூக ஆர்வலரான காலிட் இஸ்மத் கைது செய்யப்பட்டதைக் குறைகூறியதைத் தொடர்ந்து கைருல் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.
வெட்டித்தனமான / மடத்தனமான செயல்.