‘அமைதிகொள்வீர்’-மஇகா-வினருக்கு சாமிவேலு கோரிக்கை

sa myமஇகா  முன்னாள்  தலைவர்  ச.சாமிவேலு, அக்கட்சியில்  சர்ச்சையிட்டுக்  கொண்டிருக்கும்  தரப்பினர் முதலில்  அமைதி  கொள்ள  வேண்டும்  எனக்  கேட்டுக்  கொண்டிருக்கிறார்.

“அது (நெருக்கடிக்குத்  தீர்வு) உடனே  வந்து  விடாது. முதலில்  நீங்கள்  அமைதி கொள்ள  வேண்டும்.

“அரசியலில் எவ்வளவுக்கு  அமைதியாக  இருக்கிறீர்களோ  அவ்வளவுக்கு  விரைவில்  அமைதி  உங்களை  நாடி  வரும்”, எனக்  கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம்  சாமிவேலு  கூறினார்.

மஇகா  சர்ச்சை  பற்றி  வினவியதற்கு  விவகாரம்  நீண்ட  காலத்துக்கு  இழுத்துக்  கொண்டு  போகாது  என்றார்.  மூன்று வாரங்களில்  அதற்குத்  தீர்வு  காணப்படலாம்  என்று  எதிர்பார்க்கிறார்,

மஇகாவில்  தலைவர் டாக்டர்  சுப்ரமணியத்தின் ஆதரவாளர்களும்  முன்னாள்  தலைவர்  பழனிவேலின்  ஆதரவாளர்களும்  முட்டி  மோதிக்  கொண்டிருக்கிறார்கள்.

ஜூலை  மாதம்,  கட்சி  விவகாரங்களை  நீதிமன்றக்த்துக்குக்  கொண்டு  சென்றார்  என்பதால்  பழனிவேல் கட்சித்  தலைவர்  பதவியிலிருந்து  நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து  நடைபெற்ற  கட்சித்  தேர்தலில்  சுப்ரமணியம்  தலைவரானார்.

ஆனால்,  பழனிவேலின்  ஆதரவாளர்கள்  அதை  ஏற்கவில்லை.  சுப்ரமணியத்தின்  ஆதரவாளர்களும்  சங்கப்  பதிவகமும்  சதி  செய்து  பழனிவேலை  வெளியேற்றினார்கள்  என்பது  அவர்களின்  கட்சி. சங்கப்  பதிவக  தலைமை  இயக்குனர்  அதை  மறுத்தார்.

இதனிடையே,  1979-ல்  கட்சிக்குத்  தலைமை  ஏற்றபோது  இதே  போன்ற  நிலைமையைத்    தாமும்  எதிர்நோக்கியதாக   சாமிவேலு  கூறினார்.

“நான் நன்கு  திட்டமிட்டேன். எல்லா மாநிலத்  தலைவர்களையும் கிளைத்  தலைவர்களையும்  அவர்களின்  வீடுகளுக்கே  சென்று சந்தித்தேன்.  அவர்கள் முக்கியமானவர்கள்  என்ற  எண்ணத்தை  அவர்களிடம் ஏற்படுத்தினேன்.

“அரசியலில்  எப்போதுமே  எதிராளியை  நம்மைவிட  முக்கியமானவராகக்  கருத  வேண்டும். அப்புறம்  பாருங்கள்  மக்களிடம்  உங்களுக்கு  ஆதரவு   பெருகும்”, என்றார்.