அன்வாரை விடுவிக்க மகாதிர் உதவி?

ASIAN LEADERSமுன்னாள் பிரதமர்   டாக்டர் மகாதிர் முகம்மட்   நடப்புப் பிரதமர்   நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்த்து    வருவதால்    சிறையில் உள்ள     எதிரணித் தலைவர்    அன்வார் இப்ராகிமை விடுவிக்க    அவரின்    உதவியை     நாடப்போவதாகக்    கூறுகிறார்    பாஸ் முன்னாள் உதவித் தலைவர் மூசா ஹுசாம்.

“மகாதிருடன்     எனக்கு   நல்லுறவு    உண்டு…..அவர்தான்   சரியானவர்.   அவர் நஜிப்பை எதிர்ப்பது   நல்லதாய் போயிற்று.    அன்வாரின்   விடுதலைக்கு    அவர்    உதவுவார்   என நம்புவோம்”.     கிளந்தான் பார்டி அமானா நெகாரா (அமானா)     நேற்றிரவு    பெட்டாலிங் ஜெயாவில்    ஏற்பாடு   செய்திருந்த   விருந்தில்    ஹுசாம்    இவ்வாறு கூறினார்.

“பிறகு நான் அவரைச் சந்திப்பேன்”, என்றாரவர்.

ஹுசாம்,   1970-களில் பாஸ்      பிஎன்னிலிருந்து    வெளியேற்றப்பட்டதையும்      நினைவுகூர்ந்தார்.   அந்த நேரத்தில்,   இப்போது    பாஸின் வெறுக்கத்தக்க எதிரியாக மாறியுள்ள    டிஏபி-தான்    இஸ்லாமிய கட்சிக்கு ஆதரவாக     வாதாடியது   என்றும் அவர் குறிப்பிட்டார்.

“லிம் கிட் சியாங்     எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்.    பின்னிரவு 3.30வரை நாடாளுமன்றத்தில்     நீடித்த   விவாதத்தின்போது பாஸுக்கு     ஆதரவாக     வாதாடியவர்களில்    லிம்மும் ஒருவர்.

“இப்போது    நாம்   சண்டையிட்டுக் கொள்வது ஏன்,    டிஏபி செய்த நல்லதை மறந்து விட்டோமா? கூடாது. இது உண்மை”,   என்றாரவர்.