பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி தன் கட்சி சரவாக்கில் தொடர்ந்து இருப்பது உறுதி என்பதை வலியுறுத்தினார்.
மேற்கு மலேசியக் கட்சிகள் சரவாக்கில் தலையிடுவதை சரவாக் முதலமைச்சர் அடினான் சாத்தேம் கண்டிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது அஸ்மின் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிகேஆர் ஒரு தேசியக் கட்சி. அதற்கு சரவாக் தேர்தல்களில் பங்கேற்கும் பொறுப்பு உண்டு என்று சிலாங்கூர் மந்திரி புசாருமான அஸ்மின் அலி கூறினார்.
“இது ஒன்றும் புதிதல்ல. தொடக்கத்திலிருந்தே சரவாக மாநிலத் தேர்தல்களில் கலந்துகொண்டு வந்திருக்கிறோம்.
“அங்கு இருக்கிறோம், தொடர்ந்து இருப்போம்”, என்பதை வலியுறுத்திய அஸ்மின் பிகேஆர் அங்கு சில இடங்களை வென்றிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.
மார்ச் மாதம் நடைபெறலாம் என்று கூறப்பட்டுள்ள மாநிலத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
“நெடுங் காலமாக தயாராகி வந்துள்ளோம்.. அந்த நாளுக்காகக் காத்திருக்கிறோம்”, என்றார்.
அடுத்தத் தேர்தலுக்குப் பின் பி.கே.ஆர். மறையப் போவது உறுதி.
தேனீ அவர்களே ,ஏன் மறைய போகிறது? எதற்காக என கொஞ்சம் விளக்கம் தர முடியுமா ?
அக்கட்சியின் தற்சமய நிலைப்பாடுகள் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடுவதாக இல்லை. கூட்டனி பொறுத்தவரை இரண்டுங்கெட்டான் நிலயில் இருப்பதை விட, திடமான ஒரு நிலையை தேர்ந்தெடுத்து செயல்பட்டால் உண்டு வாழ்வு. இல்லேயேல் சாவு நிச்சயம்.
அடுத்த தவனை வுங்க்களை அகட்ரிவிடுவர்,முடிந்தமட்டும் கஜானாவை காலி செய்கிறீர்,
வாழ்க நாராயண நாமம்.