பாக்ஸைட் கழிவுகளைத் துப்புரவுபடுத்த மாதம் ரிம1மி. செலவாகிறது

bauxiteபாக்ஸைட்டைச்  சேமித்து  வைக்க  தனி  இடம் இல்லை  என்பதால்  குவாந்தான்  துறைமுகத்தில்   பாக்ஸைட்  மண்  பெருமளவு  குவித்து  வைக்கப்பட்டு   தூய்மைக்கேட்டை  ஏற்படுத்தியுள்ளது. கடும் மழையால்  தூய்மைக்கேடு   மேலும்  மோசமடைந்துள்ளது.

இதைச்  சமாளிக்க   ஒரு  திட்டம்  தயாரித்திருக்கிறார்  குவாந்தான்  துறைமுக  கொன்சோர்டியம்  சென்.பெர்ஹாட் (கேபிசி)  தலைவர்    கஸ்புல்லா  ஏ.காடிர். ஆனால்,  அதைக்  குறுகிய  காலத்தில்  செயல்படுத்த  முடியாது.

“கேபிசி  பாக்ஸைட்  கழிவுகளைச்  சுத்தப்படுத்த  மாதந்  தோறும்  ரிம1மில்லியன்  செலவிட்டு  வருகிறது. ஆண்டின்  நடுப்பகுதியில்  அத்திட்டத்தைச்  செயல்படுத்தினால்  பாக்ஸைட்  ஏற்றுமதி  60-இலிருந்து   80 விழுக்காடுவரை  தூய்மைக்கேடின்றி  தூய்மையாக  நடக்கும்  என்றவர்  குவாந்தானில்  கூறினார்.

கடும்  மழை  துப்புரவு  பணிகளுக்கு  இடையூறாக  அமைந்து  விட்டது  என்றாரவர்.

மழையில்  பாக்ஸைட்  மண் பல  இடங்களுக்கு  அடித்துச்  செல்லப்படுவதைத்  தடுக்க  முடியாது  போயிற்று  என்று  அவர்  சொன்னார்.