சட்டத்தில் சீர்குலைவு: குழந்தை மதமாற்ற வழக்கே சான்று

legalsyஉங்கள்  கருத்து: ‘50 ஆண்டுகளுக்குப்  பிறகும்  சிவில்  சட்டத்தின்  எல்லை  எது,  ஷியாரியா  சட்டத்தின்  எல்லை  எது  என்பது  தெரியாமலேயே  இருக்கிறது’

நெகாராவான்: மலேசியா  ஒரு  தோல்விகண்ட  நாடு  என்பதற்கு  இது  மற்றுமொரு  எடுத்துக்காட்டு.  50 ஆண்டுகளுக்குப்  பின்னரும்  சட்டம்  இன்னும்  சீர்குலைந்துதான்  கிடக்கிறது. சிவில்  சட்டத்தின்  எல்லை  எது  ஷியாரியா  சட்டத்தின்  எல்லை  எது  என்பது  தெரியாமலேயே  இருக்கிறது.

இதைத்தான்  சந்தர்ப்பவாத  முஸ்லிம்கள்  முஸ்லிம்- அல்லாதாருக்கு  எதிராக  சாதகமாக  பயன்படுத்திக்  கொள்கிறார்கள். இரண்டு  வகை  நீதிமுறைகள்  இருப்பதில்  தவறில்லை. ஆனால்,  ஏற்படக்கூடிய,  ஏற்பட்டிருக்கும்  அநீதியைக்  களைவதற்குத்  தேவையான   அரசியல்  துணிச்சல்  இல்லாமலிருப்பதுதான்  தவறு.

சிங்கப்பூரிலும்  இரட்டை  நீதிமுறைகள்தான்.  ஆனால்,  இங்குள்ள  சட்டப் பிரச்னைகள்  அங்கு  இல்லை.  ஏனென்றால்  சிவில்,  ஷியாரியா  சட்டங்களின்  அதிகார  வரம்புகளை  சிங்கப்பூர்  அரசாங்கம்  வரையறுத்து  வைத்துள்ளது.

த  ஸ்டார்  நாளேட்டில்  ஜைட்  இப்ராகிம்  அழகாகக்  குறிப்பிட்டிருக்கிறார்  நீதித்துறையும்  சட்டத்தை  உருவாக்குவோரும்  ஆன்மாவையும்  மனிதாபிமானத்தையும்  இழந்து  விட்டார்கள் என்று.

உலக  நீதி:  இஸ்லாமிய  சட்டத்தை  முஸ்லிம்- அல்லாதாரிடம் பயன்படுத்துவது  இஸ்லாத்துக்கு  முரணாகும்.

மலேசிய  உணர்வு:  நடப்பதைக்  கண்டு  முஸ்லிம்- அல்லாதார்  கவலை  கொண்டிருப்பார்கள்.  அரசமைப்பில்  உறுதி  அளிக்கப்பட்டுள்ள  “சட்ட  ஆளுமை”யை  வழக்கமாக  நிலைநிறுத்திவரும்  சிவில்  நீதிமன்றங்கள்  நிலை  தடுமாறிப்  போயுள்ளன.

ஷியாரியா  சட்டம்  முஸ்லிம்- அல்லாதாருக்குப்  பொருந்தாது  என்று  கூறப்பட்டு  வந்தது  உண்மை அல்ல  என்று  நிறுவப்பட்டு விட்டது.  எனவே,  ஹுடுட்  சட்டம்  முஸ்லிம்- அல்லாதார்மீது  வலிய  பயன்படுத்தப்படாது  என்பதற்கு  என்ன  உத்தரவாதம்  இருக்கிறது?

செம்பருத்தி பூ:  தாயார்  குழந்தைகளைக்  கொடுமைப்படுத்துபவராக  அல்லது   மூளைக்  கோளாறு  உள்ளவராக  இருந்தால்  தவிர,  அவரின்  குழந்தைகளைப்  பராமரிக்கு  உரிமையை  அவருக்குக்  கொடுக்க  மறுப்பதை  எந்த  வகையிலும்  நியாயப்படுத்த  முடியாது.

தீர்ப்பு  விளங்கவில்லை. குழந்தைகள்மீது  தனக்குள்ள  உரிமை  தெரியாமல்  தாயைத்  திரிசங்கு  நிலையில்  தவிக்க  விடுவது  அடுக்காது.  இது மகாக்  கொடுமை.

ஒடின்: இப்பிரச்னைக்குக்  காரணங்கள் இரண்டு  என்பது  என்  கருத்து.  ஒன்று,  முஸ்லிம்  நீதிபதிகள்  முஸ்லிம்- அல்லாத ஒருவரின்  ஒருவருக்குச்  சாதகமாக  முடிவெடுக்க  விருப்பமில்லாதது.  இன்னொன்று,  பெற்றோர்  என்பதை  மலாயில்  “தாய்  அல்லது  தந்தை”  என  மொழி  பெயர்த்திருப்பது.

ஓ யா?:  “கடுமையான  சட்டங்களையும்  இதயமற்ற  நீதிபதிகளையும்  உருவாக்கவா  இப்படிப்பட்ட  நாடாக  உருவாகியுள்ளோம்?”,  என  ஜைட்  இப்ராகிம்  சரியாகவே  சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டங்களைத்  திருத்த  வேண்டும்.  நீதிபதிகளின்  நியமனத்தையும்தான். பொறுப்பு  ஆளும்  வர்க்கத்துக்கு  மட்டுமல்ல..  எதிரணிக்கும்  சிவில்  சமுதாயத்துக்கும்   உண்டு.  அனைவரும்  அரசியல்  வேறுபாடுகளை  மறந்து  நீண்ட  காலமாக  இழுத்துக்கொண்டு  போகும்  இப்பிரச்னைக்கு  முடிவு  காண  வேண்டும்.

ஷானொண்டோவா: இந்திய  சமூகத்தைக்  காக்க  மஇகா  அரசாங்கத்தை  விட்டு  வெளியேற  வேண்டும்.  அவர்கள்  ஏற்கனவே  அவர்களின்  உரிமைகள்  பலவற்றை  இழந்து  விட்டார்கள்.  இப்போது  நீதியின்  பெயரால் அவர்களின்  பிள்ளைகளும்  தாய்மார்களிடமிருந்து  பிரித்துக்  கொண்டு  சொல்லப்படுகிறார்கள்.

விஷு: இந்திரா  காந்திக்கு  நீதிமன்றங்களில்  சாதகமாக  எதையும்  எதிர்பார்க்க  முடியாது. அரசாங்கம்  உள்பட  எல்லாமே  மாற  வேண்டும்