ராஜா மூடாவை நிந்தனை செய்யும் நோக்கம் இல்லை: முன்னாள் சிஎம்

chikமுன்னாள் மலாக்கா  முதலமைச்சர்  அப்துல்  ரஹிம்  தம்பி  சிக்-கின்  வழக்குரைஞர்கள்  அவருக்கு  எதிரான  அரச  நிந்தனைக்  குற்றச்சாட்டு  கைவிடப்பட  வேண்டும்  என்று  கேட்டுக்கொள்ளும் மனுவைத்  தாக்கல்  செய்திருக்கிறார்கள்.

அதனை  அடுத்து  அப்துல்  ரஹிம்  மீதான  விசாரணையை  நீதிபதி  சிலாமாட்  யாஹ்யா  தள்ளி  வைத்தார்.

“நிந்தனை  செய்யும்  நோக்கம்  எதுவும்  இல்லை  என்பதால்  அவர்  மீதான  குற்றச்சாட்டை  மீட்டுக்  கொள்ள  வேண்டும்  என்று கேட்டுக்  கொண்டிருக்கிறோம்”, என  அப்துல்  ரஹிமின்  வழக்குரைஞர்  வான்  அஸ்மிர் வான்  மஜிட்  ஷா  ஆலமில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

அவர்களின்  கோரிக்கையை  அரசுத்  தரப்பு  பரிசீலிக்கும்.  அது  வெற்றி  பெறவில்லை  என்றால்  விசாரணைக்கு   நாள்  குறிக்கப்படும்.

கடந்த  ஆண்டு  சிலாங்கூர்  ராஜா மூடா  தெங்கு  அமிர்  ஷாவை  நிந்திக்கும்  விதத்தில்  முக  நூலில்  கருத்து  பதிந்திருந்தார்  என்று
அப்துல்  ரஹிம், 65, மீது  குற்றம்  சுமத்தப்பட்டுள்ளது.