சொத்தின் மதிப்பில் திருத்தம் செய்யப்படும்: 1எம்டிபி விளக்கம்

arulkபண்டார்  மலேசியா நிலத்தில் 60 விழுக்காடு   இஸ்கண்டர்  வாட்டர்ஃபுராண்ட் ஹோல்டிங்ஸ்- சைனா  ரயில்வே  எஞ்சினியரிங்  கார்ப்பரேசன்(IWH-CREC) கூட்டு  நிறுவனத்துக்கு  விற்கப்பட்டதில்  விலை  தொடர்பில்  நிலவும்  குழப்பத்துக்கு  மலேசிய  அரசாங்கத்துக்குச்  சொந்தமான  1எம்டிபி  விளக்கம்  அளித்துள்ளது.

முதலில்  1எம்டிபி   அந்த  நிலத்தை  ரிம7.41 பில்லியனுக்கு  விற்பனை  செய்திருப்பதாகக்  கூறியிருந்தது.  ஆனால், கூட்டு  நிறுவனத்தில்  இடம்பெற்றுள்ள  சீன  நிறுவனமான  CREC  நிலத்தின்  விலை  ரிம5.28 பில்லியன்தான்  என்று  ஹாங்காங்கில்  அறிவித்தது.

விமர்சகர்கள்  விலையில்  காணப்படும்  இந்த  வேறுபாட்டைச்  சுட்டிக்காட்டி  கேள்வி  எழுப்பினார்கள்.

1எம்டிபி  தலைவர்  அருள்  கந்தசாமி  இதற்கு  ராய்ட்டர்ஸிடம்  விளக்கம்  அளித்துள்ளார்.

ரிம7.41 பில்லியன்  என்பது  முடிவான  விலை  அல்ல  வென்றும்  2016  ஜனவரிக்கும்  ஜூனுக்குமிடையில்  அது பல  திருத்தங்களுக்கு  இலக்காகும்  என்றும்  அவர் கூறினார்.

அப்போது  நிலத்தின்  விலை  இப்போது  ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும்  விலையைப்போல்  இருக்காது  என்றாரவர்.