சிலாங்கூர் அரசு வெட்டுமர திட்டம் தொடர்பில் வெளியிட்டதாகக் கூறப்படும் கடிதத்தை வைத்திருந்தால் சேகுபார்ட் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் சமூக ஆர்வலர் பத்ருல் ஹிஷாம் ஷஹாரின், அதைக் காண்பிக்க வேண்டும்.
வெறுமனே ஊடகங்களிடம் “குரைப்பதை” நிறுத்திவிட்டு பத்ருல் கடிதத்தை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி கூறினார்.
“ஆதாரம் இருந்தால் எதற்காக நாள்தோறும் குரைத்துக் கொண்டிருக்க வேண்டும்? எம்ஏசிசி-க்குப் போகலாமே”, என்றவர் கூறினார்
சிலாங்கூர் அரசு,, சூபாடாக்கிலும் மக்கோத்தா செராசிலும் தெனாகா நேசனல் பெர்ஹாட்(டிஎன்பி) மின் கம்பங்கள் அமைக்கவுள்ள இடங்களில் வெட்டுமரம் வெட்ட அனுமதி கொடுத்துவிட்டு அது பற்றி பொய் சொல்வதாக பத்ருல் நேற்று குற்றஞ்சாட்டி இருந்தார்.
இரண்டு நிறுவனங்களுக்கு பொது டெண்டர் மூலமாக அல்லாமல் நேரடிப் பேச்சுகளின் மூலமாக மரம் வெட்டும் குத்தகை கொடுக்கப்பட்டதற்கு ஆதாரமாக “இரகசிய” கடிதம் ஒன்று தம்மிடம் இருப்பதாகவும் அவர் கூறிக் கொண்டார்.
ஆஹா மறைமுகமாக நாய் என்று சொல்லிவிட்டார் .