சமூகவலைதளங்களில் ஆட்சேபத்துக்குரிய படங்களையும் பொய்த் தகவல்களையும் போலீஸ் கண்காணிக்கிறது

copசமூகவலைதளங்களை  போலீசார்  கண்காணித்து  வருகிறார்கள். அங்கு  ஆட்சேபத்துக்குரிய  படங்கள், பொறுப்பற்ற  தகவல்கள்  பரிமாறிக் கொள்ளப்படுவதைக்  கண்ணுற்றால்  அவர்கள்  நடவடிக்கை  எடுப்பார்கள்.

போலீஸ்  இணையக் குற்றப்புலனாய்வு நடவடிக்கை  மையம் (PCIRC) இப்பணியை  மேற்கொண்டு  வரும்  என  தேசிய  போலீஸ்  படைத்  தலைவர் காலிட் அபு பாக்கார் தெரிவித்தார்.
“சமூகவலைதளத்தைப் பயன்படுத்துவோர் பொது அமைதிக்கும், ஒழுங்குக்கும்  எதிராக  கதை  கட்டுவதையும்  பரப்புவதையும் , குறிப்பாக நிந்தனைக் கருத்துகளை வெளியிடுவதையும்  நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றவர்  வலியுறுத்தினார்.

கருத்துச்  சுதந்திரம்  என்பது  விவேகமாக  பின்பற்றப்பட  வேண்டும்,  உண்மையை அடிப்படையாகக்  கொண்டிருக்க  வேண்டும்  என்பதை  காலிட்  நினைவுறுத்தினார்.