2016-இன் முதல் காலாண்டில் மலேசியாவில் வழக்கத்துக்கு மாறாக வறட்சி நிலவும், மழை பெய்வது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல் நின்யோ வானிலைதான் இதற்குக் காரணம் என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு நேற்று தெரிவித்தது.
எல் நின்யோ வானிலை ஆசியாவிலும் கிழக்கு ஆப்ரிக்காவிலும் கடும் வறட்சியைக் கொண்டுவரும் ஆனால், தென்னமெரிக்காவில் அதுவே கடும் மழையைப் பொழிவித்து வெள்ளப்பெருக்கை உண்டு பண்ணும்.
“எல் நின்யோ காலத்தில் மழையின் அளவு 20-இலிருந்து 60 விழுக்காடுவரை குறையும் என்றும் வெப்பநிலை 0.5 -இலிருந்து 2 பாகைவரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது”, என அமைச்சின் அறிக்கை கூறியது.
மலேசியாவின் வடக்கத்தி மாநிலங்களான கெடாவும் பெர்லிசும். எல் நின்யோ வானிலையை இப்போதே உணரத் தொடங்கி விட்டன. அது ஜனவரி இறுதிக்கும் மார்ச் மாதத்துக்குமிடையில் தீவகற்ப மலேசியாவின் மற்ற பகுதிகளுக்கும் கிழக்கு மலேசியாவுக்கும் பரவும் என அது கூறிற்று.
நஜிப் ரோச்மாஹ் iceland செல்ல விருப்பதாக இந்த கால கட்டத்தில் ஜோஹோரில் பரவலாக பேச படுகிறது