டிஏபி ஜோகூர் சட்டமன்ற இடங்களுக்கு மாலாய்க்கார வேட்பாளர்களைக் களம் இறக்குவதில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என ஜோகூர் அமானா பேராளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
டிஏபி மலாய்க்காரர்களுக்கு எதிரி, இஸ்லாத்துக்கு எதிரி என்று சொல்லிச் சொல்லியே அம்னோ ஜோகூர் புறநகர் மலாய்க்காரர்களை நம்ப வைத்துள்ளது என ஜோகூர் அமானா துணைத் தலைவர் சுல்கிப்ளி அஹமட் கூறினார்.
“ஜோகூரில் சீன நண்பர்களின் ஆதரவு உண்டு. அது பற்றிக் கவலை இல்லை. ஆனால், மலாய் வாக்காளர்கள் பற்றித்தான் கவலை.
“ஆகவே, டிஏபி நடைமுறைக்குத் தக்கபடி நடந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வேண்டுமானால் மலாய் வேட்பாளர்களை நிறுத்தலாம். சட்டமன்றத் தொகுதிகளில் வேண்டாம்.
“அப்படியே நிறுத்துவதாக இருந்தால் பிகேஆர் அல்லது அமானா சின்னங்களில் அவர்களைக் களமிறக்கலாம்”, என ஷா ஆலம் பக்கத்தான் ஹராபான் உச்சநிலை மாநாட்டில் சுல்கிப்ளி கூறினார்.
இப்படிதான் நல்ல கொலைக்கனும்
இப்போதைய உண்மை அரசியல் நிலையை மக்களிடத்தில் குறிப்பாக மலாய் வாக்காளர்களிடம் புகுத்துவதில் மலாய் தலைவர்கள் தங்கள் கடமையை முழு மூச்சாகக் கொள்ள வேண்டும். புறநகர் மக்களும் சிந்திக்கத் தெரிந்தவர்களே!!
மலைய்கரன் மூளை முட்டியிலே நம்ம முன்னோர்கள் நன்னாவே சொல்லி வைத்து சென்று உள்ளார்கள்