பிரதமர்: அரசு ஊழியர்களுக்கு ‘மாறுபட்ட சிந்தனை தேவை’

pmdeஅரசாங்கத்தில்  உற்பத்திப்  பெருக்கத்துக்கு  உதவ  அரசு  ஊழியர்கள்  “மாறுபட்ட  முறையில்  சிந்திக்க  வேண்டும்”  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அரசு  ஊழியர்கள், உலகில்  எண்ணெய்  விலை  குறைந்து  வருவதால்  எழுந்துள்ள  சவால்களைச்  சமாளிக்க  வேண்டும் என்பதையும்,   அவர்கள்  செலவு  செய்யலாம்  ஆனால்,  செலவிடபப்டும்  பணத்தில்  சிறந்த  முறையில்  பயன்பெறுவதை  உறுதிப்படுத்திக்  கொள்ள  வேண்டும் என்பதையும்  இன்று  காலை  நடைபெற்ற  பிரதமர்துறையின்  மாதாந்திர  கூட்டத்தில்  பிரதமர்  வலியுறுத்தினார்  என  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  கூறியது.