பகாங்கில், சட்டவிரோத பாக்சைட் சுரங்க நடவடிக்கை மீதான விசாரணைக்கு உதவுவதற்காக மேலும் ஆறு நில அலுவலக அதிகாரிகளை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) கைது செய்துள்ளது.
42-வயதுக்கும் 57-வயதுக்குமிடைப்பட்ட ஐந்து ஆடவர்களும் ஒரு பெண்ணுமான அவர்கள் எம்ஏசிசி சட்டம் பிரிவு 17(ஏ)-இன்கீழ் கைது செய்யப்பட்டதாக ஆணையத்தின் விசாரணை பகுதி இயக்குனர் அஸாம் பாகி-யை மேற்கோள்காட்டி உத்துசான் மலேசியா கூறியது.
கைது செய்யப்பட்டவர்கள் பகாங் நில, சுரங்கத் துறையின் அதிகாரிகள். அவர்கள், பாக்சைட் மண்ணை குவாந்தான் துறைமுகத்துக்குக் கொண்டு செல்ல நில அலுவலகத்தின் 13டி பாரத்தைச் சட்ட விரோதமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
இதுவரை பாக்சைட் விவகாரம் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பதின்மர் நில அலுவலக அதிகாரிகள்.
இந்த பாக்சைட் ஊழல் தொடர்பில் மேலும் பலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.