பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்தின் நிதிப் பிரச்னைகளைத் தீர்க்க பொதுப்பணம் பயன்படுத்தப்படவில்லை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
“ஆறு மாதங்களுக்குமுன் நான் உறுதி அளித்தது போன்று 1எம்டிபி பிரச்னைகளுக்கு முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது.
“இதில் மகிழ்ச்சி தரும் விசயம் என்னவென்றால், புரிந்துணர்வுக் குறிப்பு (எம்ஓயு) மூலமாக அல்லாமல், பொதுமக்களின் பணத்தைத் தொடாமல் ‘ஓப்பந்தம்’ மூலமாக தீர்வு காணப்படுவது”. புத்ரா ஜெயாவில், பிரதமர்துறை ஊழியர்களின் மாதாந்திர கூட்டத்தில் நஜிப் இதனைத் தெரிவித்தார்.
எங்கள் கண்களுக்கு தெரியாமலேயே அது நடந்துகொண்டுதானே இருக்கிறது ! ஜி.எஸ். டி, தொடங்கி ஆறு மாதத்திற்கு மேலாகிவிட்டதே ! புரியாதா எங்களுக்கு ???