நஜிப் ‘டிஏபி மிரட்டல்’ என்று கூறி மலாய்க்காரர் புத்திசாலித்தனத்தைப் பழித்துரைக்கிறார்

threatஅடுத்த  பொதுத்  தேர்தலில்  அம்னோ  தோற்றுப்போனால்   மலாய்க்காரர்கள்  டிஏபி-இடமும்  சீனர்களிடமும்  அரசியல்  அதிகாரத்தைப்  பறிகொடுப்பார்கள்  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  அம்னோ  பரப்புரையாளர்களும்,  சொல்லி  வருவது  மலாய்க்கார்களை  மட்டம்  தட்டுவதன்  உச்சக்  கட்டமாகும்.

இது  நஜிப்புக்கும்  அவரின்  கையாள்கள்களுக்கும்  மலாய்க்காரர்களின்  அறிவாற்றல்மீது  நம்பிக்கை  இல்லை  என்பதைக்  காண்பிக்கிறது  என  டிஏபி  மூத்த  தலைவர்  லிம்  கிட்  சியாங்  கூறினார்.

அவர்கள்  நஜிப்பின் வங்கிக்  கணக்கில் வரவு  வைக்கப்பட்ட  ரிம2.6 பில்லியனையும்  1எம்டிபி  மகா  ஊழல்களையும்  மூடி  மறைத்து  நாட்டு  மக்களின்   கவனத்தைத்  திசை  திருப்ப  முயல்கிறார்கள்  என  லிம்  கூறினார்.

“அதற்காகத்தான்,  டிஏபி-யை  மலாய்க்காரர்- எதிரி,  இஸ்லாத்துக்கு  எதிரி  என்று   அடைப்படையில்லாமல்   துர்ப்பிரச்சாரம்   செய்வதும்,  14வது  பொதுத்  தேர்தல்  மலாய்க்காரர்  அரசியல்  அதிகாரம்  நிலைத்திருக்குமா  என்பதைத்  தீர்மானிக்க  அம்னோவுக்கும்  டிஏபி-க்குமிடையில்  நடைபெறும்  போராட்டம்  என்று  எச்சரிப்பதும்.

“அடுத்த  பொதுத்  தேர்தலுக்கு முன்னதாக  அடுத்து வரும்   இரண்டரை  ஆண்டுகளில்   நன்கு  திட்டமிடப்பட்ட  இந்தப்  பரப்புரை  மேலும்  தீவிரமடையும்”.  நேற்றிரவு,  நெகிரி  செம்பிலான்,  செனாவாங்கில்  டிஏபி-இன்  விருந்தில்  லிம்  இவ்வாறு  பேசினார்.