சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் கைது செய்யப்பட்டார்

 

 ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு வெளியில் நேற்றிரவு மெழுகுவர்த்தி விழிப்பு நிலை அனுசரித்ததற்காக மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) தலைமைச் செயலாளர் எ. சிவராஜன் இன்று கைது செய்யப்பட்டார்.

அவருடன் இன்னும் மூன்று பிஎஸ்எம் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.

இன்று மாலை மணி 7.45 அளவில் அவர்கள் போலீஸ் தலைமையகத்திற்கு வெளியில் கைது செய்யப்பட்டதாக பிஎஸ்எம்மின் எம். நளினி மலேசியாகினியிடம் கூறினார்.

போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிஎஸ்எம் மத்தியக்குழு உறுப்பினர் கைருல் நிஸாம் அப்துல் கனி விடுவிக்கப்பட்ட 15 நிமிடங்களுக்குப் பின்னர் அந்நால்வரும் கைது செய்யப்பட்டனர் என்றாரவர்.