குலா: ஒற்றுமை நடை இந்திராவுக்கு, சமயம் பற்றியதல்ல

 

 இந்திரா காந்திக்கு ஆதரவு தெரிவிக்க நடத்தப்படும் ஒற்றுமை நடை மேல்முறையீட்டு நீதிமன்றம் பாலர்பள்ளி ஆசிரியையான இந்திரா காந்தி விவகாரத்தில் அளித்துள்ள தீர்ப்பின் தாக்கத்தை மக்களின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கம் கொண்டதாகும் என்று ஈப்போ பாரட் நாளுமன்ற உறுப்பினரும் இந்திரா காந்தியின் வழக்குரைஞருமான மு. குலசேகரன் கூறினார்.

மேலும், இத்தீர்ப்பு எப்படி ஒவ்வொருவரையும் பாதிக்கக்கூடும் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது என்றாரவர்.

கடந்த வாரம், இந்நிகழ்ச்சி காராக்கிலும், கூட்டரசுப் பிரதேசத்திலும் நடத்தப்பட்டது. எதிர்வரும் சனிக்கிழமை அது ஈப்போ போலோ திடலில் நடத்தப்படும். அடுத்த வாரம், அந்த ஒற்றுமை நடை சிரம்பான் மற்றும் கிள்ளான் ஆகிய இடங்களில் நடைபெறும்.