ஈராக்கிலும் சீரியாவிலும் 30 பேர் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த ஐஎஸ் தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் மலேசியர்கள்தான் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும் அது உறுதிப்படுத்தப்படுவதற்காகக் காத்திருப்பதாகவும் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கர் தெரிவித்தார்.
அவர்கள் போலியான மலேசிய அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றாரவர்.
“அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகக் காத்திருப்போம். அவர்கள் மலேசியர்கள் என்று கூறப்பட்டிருந்தாலும் நிச்சயமாக சொல்வதற்கில்லை” என்றவர் சொன்னார்.
நேற்று த நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் இரண்டு மலேசியர்கள் சீரியாவிலும் ஈராக்கிலும் தனித்தனியே மேற்கொண்ட தற்கொலைக் குண்டுவெடிப்புத் தாக்குதலில் சுமார் 30 பேர் பலியானதாக செய்தி வெளியிட்டிருந்தது.