சைனுடின்: சட்டம் தொட முடியாதவரைக் கைது செய்வது எப்படி?

zamசட்டவிரோத  பாக்சைட்  சுரங்க  நடவடிக்கையில்  சம்பந்தப்பட்டவர்களை  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி)  பிடிக்கும்  என்று  கூறியுள்ள  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடினை  முன்னாள்  அமைச்சர்  சைனுடின்  மைடின்  சாடினார்.

“பேசலாம், ஆனால், சம்பந்தட்ட மனிதர்  சட்டத்தால்  தொட  முடியாதவராக  இருந்தால்  எப்படிக்  கைது  செய்வது?”, என  ஸாம்  என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும்  சைனுடின்  வினவினார்.

“பாக்சைட்   விவகாரத்தில்  கைரி  வாயைப்  பொத்திக்கொண்டு  இருப்பது   நல்லது.  மக்களுக்குப்  பொய்யான  நம்பிக்கையைத்  தர  வேண்டாம்”, என்றாரவர்.

இதற்குமுன்  அந்த  முன்னாள்  அமைச்சர்,  எம்ஏசிசி  ‘ikan bilis'(நெத்திலி மீன்கள்)-களை  மட்டும்தாம்  பிடிக்குமா,  பெரிய  மீன்கள்  பக்கம்  போகாதா  என்று  கேள்வி  எழுப்பி  இருந்தார்.

“ஏன்,  ஆக  உச்சத்தில்  இருப்பவரைப்  பிடிப்பதற்கு  என்ன. அவரது  பெயர்தான்  வேகமாக  பரவிக்  கொண்டிருக்கிறதே”,என்றார். ஆனால்,  அவரது  பெயரைக்  குறிப்பிடவில்லை.