தம் வலைப்பதிவில் ‘இந்திராவே, உங்களுக்காக என் இதயம் அழுகிறது’ என்ற கட்டுரைப் பதிவிட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிமை போலீசார் இன்று விசாரித்தனர்.
தேச நிந்தனைச் சட்டம் பிரிவு 4(1) (சி)-இன்கீழ் அவர் விசாரிக்கப்பட்டார்.
டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் அவர் விசாரிக்கப்பட்டார்.
“நான் அப்படி எழுதியதால் சிலர் எரிச்சலடைந்திருக்கிறார்கள். என் நடவடிக்கைகள், (இந்திரா காந்தி) வழக்கில் என்னுடைய நிலைப்பாடு, என்னுடைய வலைப்பதிவு பற்றியெல்லாம் விசாரித்தார்கள்”, என ஜைட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உங்களுக்காக என் இதயம் அழுகிறது என வலைத்தளத்தில் எழுதியதற்காக விசரிக்கப்பத்தை அறிந்து நமது நீதி,நேர்மை,கண்ணியம்,கடப்பாடு,காவல் துறை எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று தெரிவில்லை. நாட்டு குடிமகனுக்கு இதை சொல்ல உரிமையில்லையா?
மறுமுனையில் அயல் நாட்டில் தான் வழிபாடும் மதத்தை சேர்ந்த மக்கள் துன்பபடுவதாக இங்கே போர்க்கொடி தூக்கும் நபர்கள், அவசமாக பொங்கி எழும் நபர்களின் மீது எந்த நடவடிக்கையும் இல்லையே ! இது ஏன். அந்த துன்பப்படும் மக்களுக்கு எதிரான நாடு எந்த காலத்திலும் இங்கே வர அனுமதி மறுக்கப்படுவது ஏன் ? நம் குடிமக்களும் அங்கே செல்லக்கூடாது என பரிந்துரைப்பது ஏன் ?இறைவன் என இருப்பாரென்றால் இதற்கு வழி காண்பாராக. மதத்தின் பேரில் அறிவிழந்து இருக்கும் மக்களுக்கு நேர்மையான பகுத்தறிவை இறைவன் வழங்க வேண்டுகிறேன் . நன்றி .
எத்தனை சட்டங்கள்! எத்தனை பலகைகள்! எந்த ஆணியையும் பிடுங்க முடியாத சுத்தியல் எத்தனை! எத்தனின் ஆட்சியில் அத்தனையும் தேச நிந்தனையா? .
இரட்டை வேடம்.இதுதான் நாட்டின் நிலைமை.மக்களின் காவலன் என மார்தட்டும் ம இ கா,பி பி பி,எலும்பு துண்டு கட்சிகள் எங்கே உங்களுது ஆவேசம். இதே எதிர்க்கட்சி செய்திருந்தால் துள்ளி எழுவீர்களே? இந்து சமய காவலன் என கொக்கரிக்கும் அரசு சார்பற்ற இயக்கங்களே இந்திரா தீர்ப்பில் ஏன் மௌனம்?
”ஒரு இஸ்லாமியர் மற்ற மதத்தாரை பார்த்து கண்களங்கி இருக்கிறார் அதில் என்ன உண்மை இருக்கிறது என்று ஆராயமல் தேச நிந்தனைச் சட்டம் பிரிவு 4(1) (சி)-இன்கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார் என்றால் அவர் செய்தது அவ்ளோபெரிய குற்றமா?…… மதவெரிபிடித்தவர்கள் இருக்கும் வரை நீதி,நேர்மைக்கு,வழியோது.
மதத்தின் பேரால் நடக்கும் அநீதியை சுடிக்காட்டினால் அதற்க்கு காவல் துறை விசாரணை…? நல்ல ஆட்சி.
அவனவன் செய்யறது
அவனவனுக்கு தெரியாது
அரசியல் ஒரு சாக்கடை
பாவம் இந்திரா
முயற்சி திருவினையாக்கும்
முடியாவிட்டால்
யாராவது ஒருவர் தீக்குளிக்க வேண்டியதுதான்
நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .வாழ்த்துக்கள் அய்யா
அடக்குமுறை- மதவாதிகளின் கையில்– மதம் ஆட்சியை ஊழல்வாதிகளிடமே இருக்க வழி செய்து தங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்டுகின்றது–இதுதான் இன்றைய நிலை–இது 80தின் ஆரம்பத்தில் சிறிது சிறிதாக நுழைக்கப்பட்டது. இன்று பேயாட்டம் போடுகின்றது–
இந்த செய்தி ம.இ.கா.காரன்களுக்கு சகல நாடியும் ஆடி போயிருக்கும் இனி இந்திரா விஷயத்தில் இவனுங்க வாயே திறக்க மாட்டானுக்கலெ.