நேற்று கெடா, சுங்கை பட்டாணி பேரங்காடி ஒன்றில் 16 வயது மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். அவன் ஐஎஸ். தீவிரவாதிகள் அல்லது டேஷ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டவனாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாதுகாப்புக் குற்றச் சட்டத்தின் (சோஸ்மா) கீழ் அப்பதின்ம வயதினன் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஐ.எஸ். பாணியில் முகத்தை மறைந்துக் கொண்டு கருப்புச்சீருடை அணிந்து கையில் கத்தி ஏந்தி ஒரு பெண்ணை மிரட்டிய அவனை போலீசார் கைது செய்ததாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் தெரிவித்தார் .
“அவன் சுங்கை பட்டாணி சமயப் பள்ளி ஒன்றின் மாணவன். சமூக வலைத் தளங்களில் காணப்படும் ஐ.எஸ். பரப்புரைகளால் கவரப்பட்டவனாக தெரிகிறது.
“அப்பெண்ணுக்குத் தீங்கு செய்யும் நோக்கம் அவனுக்கு இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது”, என்றாரவர்.

























