பகாங்கில் பாக்சைட் மண்ணை லாரிகளில் ஏற்றிச் செல்ல லாரி ஓட்டுநர்கள் வெளி மாநிலங்களிலிருந்து, சாபா, சரவாக்கிலிருந்துகூட வருகிறார்களாம்.
அதற்குக் கொடுக்கப்படும் கவர்ச்சிக்கரமான சம்பளம்தான் அவர்களை ஈர்க்கிறது. அப்படி வரும் லாரி ஓட்டுநர்கள் பலரிடம் பாக்சைட் மண் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி இருப்பதில்லை.
சாலைப் பாதுகாப்புப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. இதனால் வாரந் தோறும் பாக்சைட் லாரிகள் சம்பந்தப்பட்ட விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.
கடந்த டிசம்பர் 21-இல், ஒரு மோசமான விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்துதான் இந்த விவகாரமே வெளியில் தெரியலாயிற்று.
பாக்சைட் லாரி ஓட்டுநர்களில் ஒருவரான வான் ரோஸ்லி வான் மூடா, 43, முரட்டுத்தனமாக பாக்சைட் லாரிகளை ஓட்டும் பலரும் பகாங்குக்கு வெளியிலிருந்து வ்ந்தவர்கள் என்றார்.
“உரிமம் இல்லாமலேயே பாக்சைட் மண் ஏற்றிச் செல்கிறார்கள். அவர்களால்தான் அதிகாரிகள் லாரிகளை நிறுத்திச் சோதனை இடுகிறார்கள். அதனால் பக்சைட் மண்ணைத் துறைமுகம் கொண்டுசேர்க்க தாமதமாகிறது”, என்றார்.
லாரி ஓட்டுநர்கள் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வர படுகின்றனர். துறைமுக எல்லைக்குள்ளே பாக்சைட் மண்ணை ஏற்றி செல்ல லாரிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யபடுகின்றன.