தேச நிந்தனை குற்றத்துக்கு ஹிஷாமுக்கு 9 மாதச் சிறை

raisஅரசியல்  ஆர்வலர்  ஹிஷாமுடின்  ரயிஸுக்கு  தேச  நிந்தனைக்  குற்றச்சாட்டுக்காக  கூடுதல்  தண்டனை  விதிக்க  வேண்டும்  என்ற  அரசுத்தரப்பு  முறையீட்டை  ஏற்று  உயர்  நீதிமன்றம்  9 மாதச்  சிறைத்  தண்டனை  விதித்தது.

ஆனாலும், மேல்முறையீடு  செய்வதற்கு  இடமளித்து தண்டனையை  நீதிபதி  நிறுத்தி  வைத்து  ஹிஷாமுடினை  ரிம6,000 பிணையில்  விடுவித்தார்.

முன்பு செஷன்ஸ்  நீதிமன்றம்  இதே  குற்றத்துக்கு  ரிம5,000 அபராதம்  விதித்து  தீர்ப்பளித்திருந்தது. அவர்  அபராதத்  தொகையைச்  செலுத்தி  இருந்தார்.

இன்றைய  தீர்ப்பில்  உயர்  நீதிமன்ற  நீதிபதி  நோர்டின்  ஹசான்,  பொதுத்  தேர்தல்  முடிவுகளை  நிராகரித்து   தெருக்களில்  ஆர்ப்பாட்டம்  செய்யுமாறு   ஹிஷாமுடின்  மக்களைக்  கேட்டுக்கொண்டது  “மிகக்  கடுமையான  குற்றம்”  என்றார்.

அதன்  காரணமாகவே  ஹிஷாமுடினின்  தண்டனையைக்  கூட்ட  வேண்டுமென்ற  அரசுத்தரப்பு  கோரிக்கையை  ஏற்பதாகவும்  கூறினார்.