பல்கலைக்கழக மாணவர்களின் பசிதீர்க்க முன்வந்த என்ஜிஓ-கள்

hungryசில என்ஜிஓ-கள்  ஒன்றுசேர்ந்து  உணவு   தேவைப்படும்  பல்கலைக்கழக  மாணவர்களுக்கு  உதவும்  திட்டம்  ஒன்றைத்  தொடங்கியுள்ளன.

இதன்  பொருட்டு  Gabungan Kami Sayang Mahasiswa (Kasih) என்னும்  அமைப்பை  அவை  நிறுவியுள்ளன.  அந்த  அமைப்பின் வழி  கிள்ளான்  பள்ளத்தாக்கில்  உள்ள  பல்கலைக்கழகங்களில்  உணவு  தேவைப்படும்  மாணவர்களுக்கு  முறையாக  உணவு  வழங்கப்படும்.

“எங்களால்  மாணவர்களின்  சிரமத்தைக்  குறைப்பதற்குப்  பக்கத்  துணையாக  மட்டுமே இருக்க  முடியும்.

“அரசாங்கம்தான் இப்பிரச்னையைத்  தீர்க்கக்  கூடுதல்  பொறுப்பேற்க
வேண்டும். அதற்குப்  பல்கலைக்கழகங்களுக்குக்  கூடுதல்  நிதி  ஒதுக்க  வேண்டும்”, என காசே அமைப்பின்  தலைவர் மரியம்  அப்துல்  ரஷிட்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.