பசிபிக் மண்டல பங்காளித்துவ ஒப்பந்தம் மீது பொதுக் கருத்துக்கணிப்பு நடத்தப்படுவதையே பாஸ் விரும்புகிறது. அதற்காக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டம் நடத்துவதில் அக்கட்சிக்கு உடன்பாடில்லை.
“அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய அரசாங்கம் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும் என பாஸ் முன்மொழிகிறது”,என பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார்.
அந்த ஒப்பந்தம் பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடியது என்பதால் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அது பற்றி முடிவெடுப்பது சரியல்ல என துவான் இப்ராகிம்.
நாடாளுமன்றம் ஜனவரி 26-இலிருந்து 28வரை சிறப்பு கூட்டம் நடத்தி டிபிபிஏ மீது முடிவெடுக்கவுள்ளது. பிஎன்-னுக்குப் பெரும்பான்மை இருப்பதால் அது நாடாளுமன்றத்தில் எளிதில் ஏற்கப்படும்.
“டிபிபிஏ-க்குச் சாதகமாகவே வாக்களிக்க வேண்டும் என்ற உத்தரவு ஏற்கனவே பிஎன் எம்பிகளுக்குச் சென்றிருக்கும்”, என்றாரவர்.
டிபிபிஏ-ஆல் மருந்துகளின் விலைகள் உயரலாம் உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் அழுத்தத்துக்கு இலக்காகும் சாத்தியம் இருக்கிறது. இவை கவலைதரும் விசயங்களாகும் என துவான் இப்ராகிம் குறிப்பிட்டார்.
அந்தக் கவலையை வெளிப்படுத்தத்தான் ஜனவரி 23-இல் டிபிபிஏ-எதிர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாரவர்.
கோலாலும்பூரில் நடைபெறும் அப்பேரணியில் பாஸும் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கே (ஒன்னுக்குள் ஒன்னாக உறவாடும்) பாஸ் அம்னோ கூட்டுறவுக்கு எவ்வளவு மதிப்பு மரியாதை இருக்கிறது என்பதை உங்கள் தலைவர் (ஹாடி) அவர்களை பிரதமர் காதில் கொஞ்சம் கடிக்கச் சொல்லுங்கள். உண்மை நிலவரம் வெளிச்சமாகும்!!
உங்கள் தலைவரின் அறிவுரையை அமீனோ கேட்காதோ? நல்ல நாடகமடா இது!