அண்டை நாடான இந்தோனேசியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் நிகழ்ந்துள்ளதை அடுத்து மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை(ஜாகிம்) ஐஎஸ்- எதிர்ப்புப் பிரச்சாரத்தை முடுக்கி விடும்.
ஐஎஸ் அபாயத்தை விளக்கும் தகவல் நடவடிக்கைகளை ஜாகிம் தீவிரப்படுத்தும் என அதன் தலைமை இயக்குனர் ஒத்மான் முஸ்டபா தெரிவித்தார்.
இதற்காக நாடு முழுமையும் இமாம்களை அது ஒன்று திரட்டும்.
“வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகம் என எல்லாத் தளங்களிலும் ஐஎஸ் எதிர்ப்புத் தகவல்களை ஜாகிம் வழங்கி வரும்”, என கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் ஒத்மான் கூறினார்.
காலையில் தமிழ் தினசரிகளை தொட்டாலே, வெட்டு,குத்து செய்திகள்தான் முதல் பக்கத்தை அலங்கரிக்கும். இதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலோர் இந்திய இளைஞர்களே. இது போன்ற இளைஞர்களுக்கு அரசாங்கம் நல்ல சம்பளம் கொடுத்து, IS தீவிரவாதிகளை ஒரு கை பார்க்கச் சொன்னால், நம் நாட்டில் IS தீவிரவாதம் தலை தூக்காது. அரசாங்கம் பரிசீலிக்குமா?