அமைச்சரவை: சிவில் திருமணப் பிரச்னைகளுக்கு சிவில் நீதிமன்றத்தில்தான் தீர்வு காணப்பட வேண்டும்

subraசிவில்  சட்டப்படி  திருமணம்  செய்து  கொண்டவர்கள்  அவர்களுக்கிடையிலான  பிரச்னைகளை  சிவில்  நீதிமன்றகளில்தான்  தீர்த்துக் கொள்ள  வேண்டும்.

புதன்கிழமை  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தலைமையில்  கூடிய  அமைச்சரவைக்  கூட்டத்தில்  அது  கொள்கை  அளவில்  ஏற்றுக்கொள்ளப்பட்டதாக  சுகாதார  அமைச்சர்  டாக்டர்  எஸ். சுப்ரமணியம்  நேற்றிரவு  பத்து  மலையில்  நடைபெற்ற  பொங்கல்  விழாவில்  தெரிவித்தார்.

“இப்பிரச்னைக்குத்  தீர்வுகாண  விரும்புவதைப்  பிரதமர்  அக்கூட்டத்தில்  தெளிவாக  வலியுறுத்தினார்”, என்றாரவர்.

முஸ்லிம்-அல்லாத  இருவரின்  குடும்பக்  கட்டமைப்பும்  அவர்களின்  பிள்ளைகளும்  மதமாற்றத்தால்  பாதிக்கப்படக்கூடாது  என்று அவர்  சொன்னார்.

“ஒருவர்  மதம் மாறினால்  அதன்  தொடர்பான  விவகாரங்களை  சிவில்  நீதிமன்றங்களில்தான்  தீர்த்துக்  கொள்ள  வேண்டும்  என்பதுதான்  எங்கள்  முடிவு. இதுவே  அமைச்சரவையின்  கொள்கை”, என  சுப்ரமணியம்  கூறினார்.