ஊடகங்களிடம் நட்பாக நடந்து கொள்ள வேண்டும்-வான் ஜூனாய்டி

junaidiஇயற்கைவள,  சுற்றுச்சூழல்  அமைச்சின்  அதிகாரிகள்,  அச்சு,  மின்னியல்  ஊடகங்களின்  செய்தியாளர்களை  ஒரு  மிரட்டலாகக்  கருதக்  கூடாது  என்று   அதன்  அமைச்சர்  வான்  ஜூனாய்டி  துவாங்கு  ஜப்பார்  கூறினார்.

செய்தி  வெளியிடும்  செய்தியாளர்கள்  தங்கள்  கடமையைத்தான்  செய்கிறார்கள்.

“நடப்புகளை  எப்படிப்  பார்க்க்கிறார்களோ  அப்படித்தான்  செய்தியாளர்கள்  அறிவிப்பார்கள். அதில் ஏதாவது  தவறு  இருந்தால்  அதற்கு  விளக்கமளிப்பது  அதிகாரிகளின்  பொறுப்பு.

“அவர்களை  மிரட்டலாக  நினைக்காதீர்கள். மாறாக,  அவர்களுடன்  நெருக்கமாக  இருங்கள். அது உங்கள் வேலைக்குப்  பேருதவியாக  இருக்கும்”, என  கூச்சிங்கில்  நேற்றிரவு  அமைச்சு  உள்ளூர்  ஊடகங்களின்  ஆதரவைப்  பாராட்டி  நடத்திய  “ஊடக  இரவு”  நிகழ்வில்  வான்  ஜூனாய்டி  கூறினார்.